விளாப்பாக்கம் சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு!
சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ திடீர் ஆய்வு;
ராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று(மார்.23) ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே எல் ஈஸ்வரப்பன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் போதுமான அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறிக்கும் மருத்துவர்களை கேட்டறிந்தார்.