வேம்பு குடியில் பள்ளி நூற்றாண்டு விழா.
வேம்பு குடியில் பள்ளி நூற்றாண்டு விழா நடைபெற்றது.;
வேம்பு குடியில் பள்ளி நூற்றாண்டு விழா தா.பழூர். மார்ச்.24- அரியலூர் மாவட்டம், தா.பழுர் ஒன்றியம், வேம்புகுடி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. உடையார்பாளையம் வட்டத்தின் வட்டாட்சியர் சம்பத் முன்னிலை வகித்தார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர். க.சொ.க.கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார்.வட்டார வளமேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள்,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள்,ஊர் பொது மக்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் பிரேமலதா வரவேற்றார். ஆண்டு அறிக்கையை இடைநிலை ஆசிரியர் லாரிசா வாசித்தார். வட்டாட்சியர் சம்பத் பள்ளிக்கு தேவையான 2மைக் 2 ஸ்பீக்கர் பாக்ஸ் ஆகியவற்றை வழங்கி சிறப்புரையாற்றினார். சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் பள்ளிஆசிரியர்கள்,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்,வட்டார வள மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள், பிற பள்ளிகளிலிருந்து வருகை புரிந்த ஆசிரியர்கள்,தூய்மை பணியாளர்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். முன்னாள்,இந்நாள் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றது. அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரவிசந்திரன் நன்றியுரை கூறினார்.