விடுமுறை நாள்களிலும் புதைபடிமங்கள் சேகரித்த அரசுப் பள்ளி மாணவர்கள்.

விடுமுறை நாள்களிலும் புதைபடிமங்கள் சேகரித்த அரசுப் பள்ளி மாணவர்கள்.;

Update: 2025-03-23 17:40 GMT
விடுமுறை நாள்களிலும் புதைபடிமங்கள் சேகரித்த அரசுப் பள்ளி மாணவர்கள் அரியலூர், மார்ச் 23: அரியலூர் அடுத்த அயன்ஆத்தூர் கிராமத்திலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், ஞாயிற்றுக்கிழமை களப் பணிகளை மேற்கொண்டு, புதைபடிமங்களை சேகரித்தனர். விடுமுறை நாள்களை பயன் உள்ளதாக இருக்க வேண்டும் என்று எண்ணிய அப்பள்ளி மாணவர்கள், சமூக அறிவியல் ஆசிரியர் அ.அன்பு தலைமையில் ஒரு வேனில் கல்லங்குறிச்சி, பள்ளக்காவேரி ஆகிய கனிம சுரங்கப் பகுதிகளுக்கு களப் பயணம் மேற்கொண்டனர். அங்கு பல்வேறு வகையான புதைபடிமங்களை கண்டறிந்து, அதனை சேகரித்தனர். அவைகளை பள்ளியில் காட்சிப்படுத்தப்படும் என்று தெரிவித்தனர்.

Similar News