மத்தியில் ஆட்சியில் இருக்கக்கூடிய பாஜக கையில் ராணுவம் இருக்கலாம் துப்பாக்கி இருக்கலாம் இயந்திரத் துப்பாக்கி இருக்கலாம் ஆனால் அவை செங்கொடி முன் அடிமணியம்.
பாஜக கையில் ராணுவம் இருக்கலாம் துப்பாக்கி இருக்கலாம் இயந்திரத் துப்பாக்கி இருக்கலாம் ஆனால் உங்கள் இயந்திர துப்பாக்கிகளும் ராணுவமும் ராணுவ உடையுடன் இருக்கிற ராணுவ வீரர்களும் செங்கொடிக்கு முன்னால் அடிபணிவார்களே ஒழிய செங்கொடி இயக்கம் ஒருபோதும் அடிபணியாது என கந்தர்வகோட்டை எம்எல்ஏ பேசினார்.;
அரியலூர், மார்ச்24- மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு குறித்த விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் நீதி அளிப்பு கூட்டம் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது இதில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செங்கொடி பேரணியும் நடைபெற்றது இதனை அடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை சிறப்புரையாற்றினார் அப்பொழுது ஒரே நாடு ஒரே கட்சி கொண்டு வர பார்க்கிறார்கள் ஒரே கட்சி என்றால் காங்கிரஸ் இருக்குமா திமுக இருக்குமா? அதிமுக இருக்குமா எந்த கட்சியும் இருக்காது தமிழ்நாட்டில் 61 கட்சிகள் உள்ளன இந்த 61 கட்சிகளையும் போற போக்கில் ஒலித்து விடுவோம் என நினைக்கிறார் நரேந்திர மோடி நாங்க சவால் விடுகிறோம் இந்தியாவை பாதுகாக்க நடக்கப் போகிற யுத்தம் பாரதிய ஜனதா கட்சிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தான். இந்த யுத்தத்தில் யார் வெல்ல வேண்டும் என்பதை தீர்மானிப்பது நாட்டு மக்கள்தான் எங்கள் கையில் ராணுவம் இருக்கிறது துப்பாக்கி இருக்கிறது எங்கள் கையிலே சிறைச்சாலை இருக்கிறது எங்கள் கையிலே நீதிமன்றம் இருக்கிறது எங்கள் கையில் தன்னாட்சி அதிகாரம் கொண்டிருக்கிற அமைப்புகள் உள்ளன உங்களால் என்ன செய்ய முடியும் என்கிறார்கள் நாங்கள் சொல்லுகிறோம் உங்கள் கையிலே ராணுவம் இருக்கலாம் துப்பாக்கி இருக்கலாம் இயந்திரத் துப்பாக்கி இருக்கலாம் ஆனால் உங்கள் இயந்திர துப்பாக்கிகளும் ராணுவமும் ராணுவ உடையுடன் இருக்கிற ராணுவ வீரர்களும் செங்கொடிக்கு முன்னால் அடிபணிவார்களே ஒழிய செங்கொடி இயக்கம் ஒருபோதும் அடிபணியாது தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தொகுதியை குறைக்க வட மாநிலத்தில் இருக்கிற நரேந்திர மோடி முடிவெடுக்கிறார் இப்போது 39 எம்பிக்கள் இருக்கிறோம் எம்பிக்களை எப்படி குறைக்கிறார்கள் என்றால் ஜனத்தொகை அடிப்படையில் குறைப்பதாக கூறுகிறார்கள் இதனால் 8 எம்பி குறையப் போகிறது இந்த எட்டு எம்பி யை வேணும் என்று கேட்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் போராட்டம் நடத்துகிறார் தமிழக சட்டமன்றத்திற்கு உள்ளே போராட்டம் நடத்துகிறோம் தமிழ்நாட்டு மக்கள் போராடுகிறார்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கிற கம்யூனிஸ்ட் இயக்கம் போராடிக் கொண்டிருக்கிறோம் நேற்றயதினம் தமிழ்நாடு முதலமைச்சர் அழைப்பின் பேரில் தென் மாநில முதலமைச்சர் மற்றும் தலைவர்கள் வந்திருந்தார்கள் தமிழ்நாட்டு மற்றும் தென்னகத்தின் உரிமையை பறிக்கிற நரேந்திர மோடிக்கு எதிராக எல்லோரும் இணைந்து போராடுவோம் என்று சொல்கிறார்கள் என்றால் அந்த போராட்ட குணத்தை உருவாக்கியது கம்யூனிஸ்ட் கட்சிகளை இயக்கம். போராட்ட குணத்தை உருவாக்குவது இந்தியாவை பாதுகாக்க. இந்திய அரசியலமைப்பை பாதுகாக்க நாம் முயற்சிக்க வேண்டும் இப்போது இந்திய அரசியலமைப்பிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது இந்திய மக்களை அமைதிப்படுத்துவது இந்துக்களையும் கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்களையும் சீக்கியர்களையும் அமைதி படுத்துவது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் இந்த அரசியல் அமைப்பு சட்டத்திற்கு ஆபத்து வந்துள்ளது. புதிதாக சட்டம் கொண்டுவரப் போகிறார்கள் ஒரே நாடு ஒரே கடவுள் என்கிறார்கள் ஒரே கடவுள் என்றால் இஸ்லாமியர்களுக்கு என்ன கடவுள் கிறிஸ்தவர்களுக்கு என்ன கடவுள் இந்துக்களுக்கு என்ன கடவுள் இந்தியாவிற்கு என்ன கடவுள் என்ற கேள்வி எழுந்துள்ளது அவர்கள் விரும்புகிற கடவுளுக்கும் ஆபத்து வந்துள்ளது அப்படி வருகிற போது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி விட்டு புதிதாக மனுஸ்ருமிதி சட்டத்தை கொண்டு வர பார்க்கிறார்கள் முயற்சிக்கிறார்கள் அந்த மனுஸ்ருமிதி வேண்டுமா இந்தியாவை பாதுகாப்பதற்கான அரசியல் அமைப்பு சட்டம் வேண்டுமா என்ற விவாதம் இந்தியாவில் தற்போது விவாதிக்கப்படுகிறது எங்களுக்கு மனுஸ்ருமிதி வேண்டாம் இந்திய அரசியலமைப்பு தான் வேண்டும் என்று சொல்கிற இந்தியாவில் உள்ள எந்த கட்சியுடனும் கைகோர்க்கும் கம்யூனிஸ்ட் இயக்கம். மனுஸ்ருமிதியை மீண்டும் கொண்டு வருவதற்கு முயற்சிக்கும் நரேந்திர மோடி ஆட்சியை தூக்கி வீச வேண்டும் அதுதான் இன்றைய இலக்கு உலகத்திலேயே எல்லாமும் கிடைக்கிற ஒரு இந்தியாவை கடவுளின் பெயரால் ஆட்சி புரிய நினைக்கின்ற நீங்கள் இறப்புக்கும் பிறப்பிற்கும் கடவுள் காரணம் என கடவுள் மேலே பழி போட்டுவிட்டு இந்த மண்ணின் வளங்களை எல்லாம் சுரண்டுகிற கார்ப்பரேட்டுகளுக்கு துணை போகிறது நரேந்திர மோடி அரசு. 19 லட்சம் கோடி கார்ப்பரேட்டுகளுக்கு தள்ளுபடி செய்துள்ளது எங்கள் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி பண்ணினாயா? 100 நான் வேலை திட்டத்திற்கு சம்பளம் கொடுத்தியா படிக்கும் பிள்ளைகளுக்கு 2500 கோடி பணத்தை கொடுக்க மாட்டேன் மும்மொழி கொள்கையை ஆதரிக்க சொல்கிறாய் நாங்கள் மும்மொழி கொள்கையை ஆதரிக்க மாட்டோம் அவரவர்கள் பேசுகிற மொழியை அவரவர்கள் வழிபடுகிற கடவுளை நாங்கள் தடுக்கவில்லை இந்தியா என்ற நாடு ஒரு கதம்பம் அந்த கதம்பத்தை அமைதியாக இருக்க வேண்டும் அத்தகைய பாதையை பயணத்தை தொடருவதற்கு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சார்பில் மதுரையில் மாநாடு நடத்தப்பட உள்ளதாக கூறினார்.