போளூரில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி.
சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்பு.;
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தனியார் மண்டபத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் பதாவுல்லாஹ்கான் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக மாவட்ட பொருளாளர் அப்துல் சுபஹான் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் மேலும் உடன் தூய இருதய ஆண்டவர் ஆலயம் அருட்தந்தை சகாய பிரான்சிஸ் பின்டோ, மாநில செயற்குழு உறுப்பினர் பையாஸ் அஹ்மத், மாவட்டத் தலைவர் முஸ்தாக் பாஷா, தொழிலதிபர் அன்சர் பாஷா, சாய் கிளினிக் காதர் பாட்ஷா, பேரூராட்சி உறுப்பினர்கள் கவிதா கருணாகரன், லாவண்யா முருகன், ஜோதி குமரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் யாசின், விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் அணி மாநில துணை செயலாளர் நாகராஜன், தேமுதிக மாவட்ட அணி செயலாளர் அஷ்ரப், தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் சத்யா, மாவட்ட தொழிலாளர் அணி முஜீப், பாமக நகர செயலாளர் குமரன், அதிமுக வட்ட செயலாளர் கருணாகரன், தமுமுக நகர செயலாளர் அஸ்கர் பாஷா, நாம் தமிழர் கட்சி கந்தன், டிஎஸ்பி சூப்பர் மார்க்கெட் அஸ்லம் பாஷா, நவாஸ் மெடிக்கல்ஸ் முகமது ஷாஹே பாபர், சூப்பர் மொபைல்ஸ் அப்சல், டாக்டர் தீன், அப்துல் சேட்டு மற்றும் அதிமுக, பாமக,தவெக, எஸ்டிபிஐ, விசிக,நாதக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.