தி.மலை : தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு.
திமுக மாவட்ட துணை செயலாளர், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி வரவேற்றார்.;
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் தளபதி மு க ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்த தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன்.அவர்களை திமுக மாவட்ட துணை செயலாளர், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி வரவேற்றார். இந்நிகழ்வில், திமுக மாநில மருத்துவரணி துணை தலைவர் எ.வ.வே.கம்பன், மாநகராட்சி செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.