தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை
வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிந்த மகனை தாய் கண்டித்ததால் அரியமங்கலம் அருகே 16 வயது இளைஞர் தற்கொலை;
திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் ஜீவானந்தம் தெருவை சேர்ந்த ராஜசேகரின் மகன் ருத்ராபதி (வயது 16). 8-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் படிப்பை நிறுத்தி விட்டு காந்திமார்க்கெட்டில் கூலி வேலை செய்து வந்தார். ருத்ராபதி சரியாக வேலைக்கு செல்லாமல், தனது நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால், வேலைக்கு செல்லாமல் இப்படி ஊர் சுற்றுகிறாயே? என அவரது தாய், ருத்ராபதியை கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த ருத்ராபதி நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த அரியமங்கலம் போலீசார் ருத்ரா பதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.