மனநலம் பாதிக்கப்பட்ட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்ப திந்து விசாரணை;
திருச்சி மாவட்டம் தா.பேட்டையை அடுத்த மருக்கலாம்பட்டியை சேர்ந்தவர் சகாதேவன் (48). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி அன்னக்கிளி என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். சகாதேவன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்ப திந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.