பணம் பறித்த ரவுடி கைது
எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த ரவுடி கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டு தகராறு செய்ததால் கைது;
திருச்சி கிராப்பட்டி விறகு பேட்டையை சேர்ந்தவர் தங்கவேல் (47). பூ வியாபாரியான இவரிடம் எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த ரவுடியான காளி ரஞ்சித் (28) என்பவர் பணம் கேட்டு தகராறு செய்து, கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இது குறித்து தங்கவேல் கொடுத்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் காளி ரஞ்சித்தை கைது செய்தனர்.