காரிமங்கலத்தில் தேங்காய் விற்பனை ஜோர்

காரிமங்கலம் வாரச்சந்தையில் 21 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை;

Update: 2025-03-25 02:48 GMT
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாட்களில் தேங்காய் விற்பனைக்காக பிரத்யேகமாக வார சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த வாரச்சந்தைக்கு தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிருஷ்ணகிரி சேலம், திருப்பத்தூரில் உள்ள மாவட்டங்களிலும் விவசாயிகள் வந்து செல்கின்றனர். நேற்று மார்ச் 24 நடைபெற்ற சந்தையில் ஒன்றரை லட்சம் தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. தேங்காய்களின் அளவைப் பொறுத்து ரூ. 12 முதல் ரூ.23 வரை விற்பனையானது. மொத்தம் 21 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை நடைபெற்றதாக என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வரும் தினங்களில் பண்டிகைகள் வர இருப்பதால் விற்பனை அதிகரிக்கும் எனவும் தெரிவித்தனர்.

Similar News