கூலி தொழிலாளி கைது
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட கூலி தொழிலாளி கைது;
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த வேலன்காட்டுப்புதூர், வேலம்பாளையத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார். இவரது மனைவி ஷோபனா (35). இரு தினங்களுக்கு முன்பு காலையில் தனது மொபட்டில் மொடக்குறிச்சி -சேமூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஆலூத்து பாளையம் என்ற இடத்தில் அவரை பின் தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஷோபனா அணிந்திருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இத்தொடர்பாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி நந்தகோபால் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் நந்தகோபால் ஆன்லைன் விளையாட்டில் ஏராளமான பணத்தை இழந்ததால் கடனில் சிக்கி உள்ளார். கடன் கட்ட முடியாத நிலையில் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.