தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் பாமக வக்கீல் பாலு பேட்டி..
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் பாமக வக்கீல் பாலு பேட்டியில் தெரிவித்துள்ளார்.;

அரியலூர், மார்ச் 25 - மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டு ஜெயங்கொண்ட சட்டமன்ற தொகுதி பொதுக்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர் தமிழ்மறவன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக பாமக நகர செயலாளர் பரசுராமன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் சமூகநீதி பேரவை தலைவரும், பாமக வழக்கறிஞருமான வக்கீல் பாலு, தர்மபுரி நாடாளுமன்ற பொறுப்பாளர் ஸ்டீ ல்சதாசிவம், தஞ்சாவூர் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜோதிராஜ், வன்னியர் சங்க மாநில செயலாளர் க.வைத்தி, பாமக மாநில அமைப்பு தலைவர் டிஎம்டி திருமாவளவன், முன்னாள் மாவட்ட செயலாளர் ரவி என்கின்ற ரவிசங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றி பேசினர்.கூட்டத்தில் மாவட்ட தலைவர் அசோகன், மாணவரணி மாநில நிர்வாகி ஆளவந்தார், படை நிலை செந்தில் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை,நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சமூக நீதி பேரவை தலைவரும், பாமக வழக்கறிஞருமான வக்கீல் பாலு செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் :- நாடாளுமன்ற சட்டமன்ற தொகுதி மறுவரையறையால் தென்மாநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்படும் எனவே தென் மாநிலங்களை சேர்ந்த அனைத்து மாநில அமைச்சர்களையும் கொண்ட ஒருங்கிணைப்பு குழு உருவாக்க வேண்டும் என்ற நல்ல ஒரு ஆரோக்கியமான ஆலோசனையை அனைத்து கட்சி கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார் அதனை தொடர்ந்து தான் இந்த முயற்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்டு அதற்கான முயற்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அந்த விதத்தில் இந்த முயற்சிக்கு காரணமான பாட்டாளி மக்கள் கட்சி என்ற வகையில் எங்களுக்கு மகிழ்ச்சி தான் டெல்லி நீதிமன்ற நீதிபதி வீட்டிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டது குறித்த கேள்விக்கு அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் முன்னதாக அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டவர் அங்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்து நிலையில் தான் அவர் அங்கிருந்து டெல்லிக்கு வந்தார் மீண்டும் அவர் மீது விமர்சனம் வந்தவுடன் மீண்டும் அவரை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதற்கு அம்மாநில உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்கள் நாங்கள் என்ன குப்பை தொட்டியா சரியில்லாத பொருட்களை எல்லாம் எங்கள் மீது திணிப்பதற்கு இதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என கூறியுள்ளனர் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் குறித்து விவரங்கள் விளக்கங்களை கேட்டு பெற வேண்டும் நீதிபதியாக இருக்கக்கூடிய காரணத்தினால் அவர் பணியிட மாற்றம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் ஆனால் இதே வேறொரு அரசு ஊழியராக அதிகாரியாக இருந்தால் உடனடியாக பணியிடை நீக்கம் பணிநீக்கம் செய்திருப்பார்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகளை பணியிடை நீக்கம் மற்றும் பணி நீக்கம் செய்யக்கூடிய சட்டங்கள் இல்லாத காரணத்தாலும் மாற்றம் மட்டுமே செய்ய முடியும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர் வாக்களித்தால் மட்டுமே ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியும் அதுபோன்று இதுவரை இந்தியாவில் ஒருவர் மீது கூட பணி நீக்கம் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை மாற்றம் செய்திருக்கிறார்கள் ஆனாலும் ஒட்டுமொத்த இந்தியாவும் பேசக்கூடிய வகையில் உள்ளது அதன் பின்னணியில் அந்த பணம் எப்படி வந்தது என்பது குறித்து ஒரு விசாரணை நடத்த வேண்டும் பாட்டாளி மக்கள் கட்சி 2026 இல் மிகப்பெரிய அளவில் தமிழகத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில்தான் எங்கள் கட்சித் தலைவர் அண்புமணி ராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ஐயாவும் மேற்கொண்டு வருகிறார்கள் வெற்றி கூட்டணி அமைவதற்கான நல்ல உத்தியை எங்கள் கட்சி மேற்கொள்ளும் அதனை உரிய நேரத்தில் எங்கள் கட்சி அறிவிப்போம் 2026 தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும் அந்தக் கூட்டணி ஆட்சியில் பாட்டாளி மக்கள் கட்சியிடம் பெற்றிருக்கும் எனக் கூறினார். .