ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் விழுந்த பசுமாடு : பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த : தீயணைப்பு துறையினரர் : பொதுமக்கள் பாராட்டு .

ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் விழுந்த பசுமாட்டை பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.;

Update: 2025-03-25 13:08 GMT
அரியலூர், மார்ச்.25 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இளையோர் தெற்குவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர் கறவை மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் முதல் அவர் வளர்த்து வந்த மாடுகளில் ஒரு பசுமாடு காணாமல் போனதால் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இலையூர் தெற்குவெளி தெற்கு தெருவில் வயல்வெளியில் உள்ள ஒரு தரைமட்ட கிணற்றில் மாடு சத்தம் போடுவது கேட்டு கிணற்றை எட்டிப் பார்த்த போது 40 அடி ஆழமுள்ள கிணற்றில் பசுமாடு தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.இது குறித்து தகவல் அறிந்த தங்கமணி  செய்வதறியாது பசுமாட்டை மீட்க முயற்சியில் ஈடுபட்டு முயற்சி தோல்வி அடைந்தது. பின்னர் இதுகுறித்து தங்கமணி ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் கயிறு கொண்டு இறங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசுமாட்டின் மீது கயிறு முடிச்சுகளை போட்டு லாவகரமாக கிணற்றிலிருந்து மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.. கிணற்றில் விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்ட. தீயணைப்பு துறையினருக்கு தங்கமணி குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்..

Similar News