செஞ்சியில் அமமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
எட்டாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது;

செஞ்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.ம.மு.க., சார்பில் கட்சியின் 8ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது.ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் பாஸ்கர், பேரவை தலைவர் சீனுவாசன் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர் சிலார்பாஷா வரவேற்றார். சிறுபான்மை பிரிவு சர்தார் துவக்கவுரையாற்றினார்.மாநில அமைப்பு செயலாளர் கரிகாலன், முன்னாள் எம்.எல்,ஏ. கணபதி, வடக்கு மாவட்ட செயலாளர் முத்து ஆகியோர் சிறப்புரையாற்றி, நலத் திட்ட உதவிகளை வழங்கினர்.மாவட்ட நிர்வாகிகள் தனலட்சுமி, முத்துலட்சுமி, லோகேந்திரன், கோவிந்தன், முரளி, பொதுக்குழு உறுப்பினர்கள் அம்சா, அப்துல்ரஷீத், கருணாநிதி, முத்துகுமார், மகேந்திரன், ராமமூர்த்தி, கணேசன், பழனிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.செஞ்சி நகர செயலாளர் இளங்கோ நன்றி கூறினார்.