ஸ்ரீரங்கம் கீழவாசல் ரெயில்வே கேட் இன்று மூடல்
பராமரிப்பு பணி காரணமாக ஸ்ரீரங்கம் கீழவாசல் ரெயில்வே கேட் இன்று மூடப்படுகிறது;

வாளாடி மற்றும் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே இன்று (புதன்கிழமை) ஸ்ரீரங்கம் கீழவாசல் ரோட்டிலுள்ள ரெயில்வே லெவல் கிராசிங் கேட்டில் பராமரிப்பு பணி மற்றும் சாலையில் வேகத்தடை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதன் பொருட்டு அங்குள்ள ரெயில்வே கேட் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படும். ஆகவே பொதுமக்கள் யாத்ரிநிவாஸ் அருகேயுள்ள சுரங்கப் பாதையை மாற்று ஏற்பாடாக பயன்படுத்தி கொள்வதற்கு தகுந்த பாது காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ரெயில்வேது றையில் இருந்து பல்வேறு அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது.