போக்சர் சட்டம் பாய்ந்தது
சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் சிறுமியுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கிய லாரி டிரைவர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு;

ஈரோடு மாவட்டம் கொடுமுடி, வடக்கு மூர்த்திபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரம் (39). லாரி டிரைவர். இவருக்கு ஈரோடு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் சமூக வலைத்தளத்தின் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தின் மூலம் சிறுமிக்கு காதல் ஆசை வார்த்தை கூறி கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரூர் வெங்கமேட்டில் சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இதை அடுத்து சிறுமியின் பெற்றோர் மகளை காணவில்லை என கொடுமுடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சிறுமி தற்போது கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.இதை அடுத்து சிறுமியுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கிய சிதம்பரத்தின் மீது கொடுமுடி போலீசார் குழந்தை திருமண தடைச் சட்டம் மற்றும் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.