பவானிசாகர் அருகே சாலையோரத்தில் இறங்கிய கார் முன் இருக்கையில் மோதி இளம்பெண் சாவு

பவானிசாகர் அருகே சாலையோரத்தில் இறங்கிய கார் முன் இருக்கையில் மோதி இளம்பெண் சாவு;

Update: 2025-03-26 03:21 GMT
பவானிசாகர் அருகே சாலையோரத்தில் இறங்கிய கார் முன் இருக்கையில் மோதி இளம்பெண் சாவு
  • whatsapp icon
பவானிசாகர் அருகே சாலையோரத்தில் இறங்கிய கார் முன் இருக்கையில் மோதி இளம்பெண் சாவு சத்தியமங்கலம் காந்திநகரை சேர்ந்தவர் ராஜகோபால். இவ ருடைய மனைவி கவிதா. மகன் சீனிவாசன், மகள் விவேகா (வயது 29). திருமணம் ஆகாதவர். கோவை சிங்காநல்லூரில் உள்ள சி.எஸ்.ஐ மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜகோபால் இறந்து விட்டார். இந்தநிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் கோவை மாவட்டம் ஓதி மலைக்கு சீனிவாசன் அவருடைய மனைவி ஹரி மயூரா, தாய் கவிதா, தங்கை விவேகா ஆகியோர் காரில் சென்றனர். பின் இருக்கையில் கவிதாவும், விவேகாவும் அமர்ந்திருந்தனர். பவானிசாகர் அடுத்துள்ள மேட்டுப் பாளையம் ரோட்டில் சீரங்கராயன்க ரடு என்ற இடத்தில் சென்றபோது கார் நிலைதடுமாறி சாலை யோர பள்ளத்தில் இறங்கி நின்றது. அப்போது விவேகா தலை முன் இருக்கையில் பலமாக மோதியது. இதனால் படுகாயம் - கிராம அடைந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மற்ற 3 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News