அரசு மேல்நிலைப் பள்ளியில் அவல நிலை!
தூத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 3 ஆண்டு காலமாக மழைநீர் தேங்கி விஷ ஜந்துக்கள் அச்சுறுத்தல் இருப்பதாக இந்திய மாணவர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.;
தூத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 3 ஆண்டு காலமாக மழைநீர் தேங்கி விஷ ஜந்துக்கள் அச்சுறுத்தல் இருப்பதாக இந்திய மாணவர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. தூத்துக்குடி சி.வ அரசு அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 3 ஆண்டு காலமாக தண்ணீர் தேங்கிய நிலையில் நோய் தொற்று வரும் அபாயம் உள்ளது. 6 அடி உயரத்திற்கு மேல் கோரை புற்கள் மற்றும் ஊர்வன ஜந்துக்களால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். ஆகவே மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் சார்பாக மாவட்டச் செயலாளர் எம்.கிஷோர் குமார் வலியுறுத்தியுள்ளார்.