சிட்டுக்குருவிகளை பாதுகாக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு

சகாயதோட்டம் தொன் போஸ்கோ வேளாண்மை கல்லூரி சார்பில், சிட்டுக்குருவிகளை பாதுகாப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு;

Update: 2025-03-26 08:12 GMT
சிட்டுக்குருவிகளை பாதுகாக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு
  • whatsapp icon
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சியில், ஊராட்சி ஒன்றிய முன்மாதிரி நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், மார்ச் 20, சர்வதேச சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு, சகாயதோட்டம் தொன் போஸ்கோ வேளாண்மை கல்லூரி சார்பில், சிட்டுக்குருவிகளை பாதுகாப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.பள்ளி தலைமையாசிரியர் குமார் தலைமை தாங்கினார். அதில், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை மற்றும் மொபைல்போன் கதிர்வீச்சால் சிட்டுக்குருவிகள் நாளுக்கு நாள் அழிந்து வருகின்றன. இதனால், பள்ளிப்பருவத்தில் இருந்தே மாணவர்களுக்கு சிட்டுக்குருவிகளை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், வீடுகளில் உள்ள தோட்டங்களில் ரசாயன மருந்துகள் பயன்படுத்துவதை தவிர்த்து, இயற்கை உரங்களை பயன்படுத்த மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Similar News