ஸ்ரீபெரும்புதுார் டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
ஸ்ரீபெரும்புதுார் காவல் உட்கோட்டத்தின் புதிய, துணை காவல் கண்காணிப்பளாராக பொறுப்பேற்றார்;

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் காவல் உட்கோட்டத்தின்கீழ், ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம், ஒரகடம் காவல் நிலையங்கள் உள்ளன. தமிழக தொழில் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஸ்ரீபெரும்புதுாரில், தொழிற்சாலை கழிவு வாங்கி விற்பது, தொழிற்போட்டி, முன்விரோதம் உள்ளிட்ட காரணங்களுக்காக பல கொலை சம்பங்கள் நடந்துள்ளன. இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்து, உதயகுமார், ஐ.பி.எஸ்., பதவி உயர்வு பெற்று, இம்மாதம் பணி மாறுதலில் சென்றார். இதையடுத்து, கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளராக இருந்து, கீர்த்திவாசன் நேற்று, ஸ்ரீபெரும்புதுார் காவல் உட்கோட்டத்தின் புதிய, துணை காவல் கண்காணிப்பளாராக பொறுப்பேற்றார்.