ஜெயங்கொண்டத்தில் தனியார் ஸ்வீட் கடையில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு

ஜெயங்கொண்டத்தில் தனியார் ஸ்வீட் கடையில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.;

Update: 2025-03-26 14:53 GMT
அரியலூர். மார்ச்.27- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்  கடைவீதியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒரு தம்பதியினர் தங்களது திருமண நாளை கொண்டாடுவதற்காக தனியார் ஸ்வீட் பேக்கரி கடையில் ஸ்வீட் வாங்கி சென்றனர். அதை பிரித்துப் பார்த்தபோது அதில் பூஞ்சானம் பூத்து இருந்ததால் கடைக்காரரிடம் சென்று  புகார் செய்தனர்.. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது..இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் அந்த தம்பதியினர் புகார் அளித்தனர். இது குறித்து போலீசாரும் விசாரித்தனர். இந்நிலையில்  சமூக ஆர்வலர்கள் கெட்டுப்போன ஸ்வீட் விற்பனை செய்வதாக அரியலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் அகத்தியா தனியார் ஸ்வீட் கடையில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில்  தயாரித்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோ ஸ்வீட்டில்  தேதி குறிப்பிடப்படாமல் இருந்தது. மேலும் கூடுதல் கலர் சேர்க்கப்பட்டிருந்தது, அதில் தேதி குறிப்பிட அறிவுறுத்தப்பட்டது. மேலும் குளிர்சாதனப் பெட்டியில் மூடி வைக்காமல் இருந்த 5 லிட்டர் பால் மற்றும் அழுகிய நிலையில் இருந்த 2 கிலோ பழங்கள் ஆகியவற்றையும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது மேலும் பாதுஷா, மைசூர் பாக்கு உள்ளிட்ட இனிப்பு வகைகளை ஆய்வுக்காக எடுத்து அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலரிடம் கேட்டபோது இது போன்ற ஆய்வுகள் அடிக்கடி மாவட்டம் முழுவதும் குறிப்பாக ஜெயங்கொண்டம் பகுதியிலும் நடைபெறும் என தெரிவித்தார்.எனவே கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களின் நலன் கருதி மிகுந்த அக்கறையுடனும் பாதுகாப்புடனும் உடல் நலம் கருதி சுகாதாரமான உணவுப் பொருட்களை விற்பனை செய்ய அறிவுறுத்தினார். மேலும் ஆய்வினை தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர் அகத்தியா பணியாளர்களிடம் உணவு கையாள்வது பற்றி தன்சுத்தம்,, தலையுறை மற்றும் கையுறை அணிவதன் அவசியம், உணவு பொருட்களில் தயாரிப்புதேதி, கலாவதி தேதி குறிப்பிடுவது அவசியம், அதிக நிறமிகள் பயன்பாட்டினால் ஏற்படும் புற்றுநோய், உணவு பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் போது கலாவதி தேதி பார்த்து வழங்க வேண்டும், பணியாளர்கள் இவற்றையெல்லாம் அவசியம் தெரிந்து கொள்ளுதல் வேண்டும் என்ற  விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றார்..ஆய்வின்போது ஜெயங்கொண்டம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பாபு, களப்பணி உதவியாளர் விஜயகுமார், சுகாதார ஆய்வாளர் முத்துபிரபாகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Similar News