மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது சமத்துவ இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் திருக்குர்ஆன் அனைவருக்கும் ஆனது அனைவரும் அதனை அறிந்து கொண்டு பின்பற்ற வேண்டும் என்றும் இஸ்லாம் என்பது பிறர் நலனை பற்றியும் கவலைப்படுவதான் என்று தெரிவித்தார்;

Update: 2025-03-27 16:48 GMT
  • whatsapp icon
மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது சமத்துவ இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் திருக்குர்ஆன் அனைவருக்கும் ஆனது அனைவரும் அதனை அறிந்து கொண்டு பின்பற்ற வேண்டும் என்றும் இஸ்லாம் என்பது பிறர் நலனை பற்றியும் கவலைப்படுவதான் என்று தெரிவித்தார் திருவள்ளூர் மாவட்டம் புழல் காவாங்கரையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இதில் தமிழ்நாடு ஹச் கமிட்டி தலைவர் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது புழல் எஸ் ஏ சேக் முகமது அலி மாநில அமைப்பு செயலாளர் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் ஆகியோர் கலந்து கொண்டு இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் கலந்து கொண்டு பேசுகையில் சிறுபான்மையினருக்கு ஏதாவது பிரச்சனை என்று வந்து விட்டால் முதலில் குரல் கொடுப்பவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தான் என்றும் அண்ணா கலைஞர் வழியில் முதல்வர் சிறுபான்மையினருக்கு பாதுகாவலனாக உள்ளார் என்றும் சில புல்லுருவிகள் ஜனநாயகத்தை ஏதேச்ச அதிகாரமாக மாற்ற வேண்டும் என்று ம் இஸ்லாமியர்களை ஒழிக்க வேண்டும் அவர்களுக்கு எந்தவிதமான உரிமையும் வழங்கக் கூடாது என்றும் நினைப்பதாகவும் ஒன்றிய அரசு பிரித்தாலும் கொள்கையை கடைப்பிடிப்பதாகவும் ஓட்டுக்களை எப்படி எல்லாம் பிரிக்கலாம் என பாஜகவும் அதிமுகவும் கூட்டணி வைக்கிறார்கள் அதை வெளிப்படையாக சொல்லவில்லை என்றும் இதை முஸ்லிம் கிறிஸ்தவ மக்கள் நம்ப மாட்டார்கள் திமுகவிற்குதான் வாக்களிப்பார்கள் என்று தெரிவித்தார் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது பேசுகையில் திருக்குர்ஆன் அனைவருக்கும் ஆனது அனைவரும் அதனை அறிந்து கொண்டு பின்பற்ற வேண்டும் என்றும் இஸ்லாம் என்பது பிறர் நலனை பற்றியும் கவலைப்படுவதான் என்றும் அவர் தெரிவித்தார்

Similar News