நெமிலி:குடிநீரில் குளோரின் அளவு சுகாதாரத்துறை சோதனை
குடிநீரில் குளோரின் அளவு சுகாதாரத்துறை சோதனை;

நெமிலி பேரூராட்சிக்குட்பட்ட காவேரிபுரம் பகுதியில் 2 லட்சம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது.இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து காவேரிபுரம் பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், குடிநீரில் போதிய அளவு குளோரின் அளவு கலக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தனர்.