கோவை: கோடநாடு வழக்கு - சுதாகரனிடம் சிபிசிஐடி விசாரணை !

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் விசாரணைக்காக ஆஜரானார்.;

Update: 2025-03-28 05:24 GMT
கோவை: கோடநாடு வழக்கு - சுதாகரனிடம் சிபிசிஐடி விசாரணை !
  • whatsapp icon
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று நேரில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் சுமார் ஒன்றேகால் மணி நேரம் சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் மாதவன், கூடுதல் கண்காணிப்பாளர் முருகவேல், துணை கண்காணிப்பாளர் சந்திரசேகர் உள்ளிட்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுதாகரன், தன்னிடம் நாற்பது கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், விசாரணை நன்றாக இருந்தது எனவும் தெரிவித்தார். மேலும் கேட்ட கேள்விக்கு தனக்கு தெரிந்த உண்மையை தெளிவாக கூறிவிட்டேன் எனவும், கூறினார்.

Similar News