புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் குப்பை தீப்பிடித்து எரிந்ததால் கரும்புகை மூட்டம் பொதுமக்கள் அவதி
புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் குப்பை தீப்பிடித்து எரிந்ததால் கரும்புகை மூட்டம் பொதுமக்கள் அவதி;

புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் குப்பை தீப்பிடித்து எரிந்ததால் கரும்புகை மூட்டம் பொதுமக்கள் அவதி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் வாரச்சந்தை வளாகத்தில் கொட்டப்படுகின்றன. இந்த நிலையில் குப்பை தீப்பிடித்து எரிந்தது. மேலும் குப்பை யில் இருந்து கரும்புகை எழும்பியதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு கண் எரிச்சல், சுவாசக்கோளாறு போன் றவை ஏற்பட்டன. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீவிபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுதொடர்பாக புஞ்சைபுளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.