மேலூரில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு
மதுரை மேலூர் ஜம் ஜம் பள்ளிவாசலில் நேற்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
மதுரை மாவட்டம் மேலூர் ஜம் ஜம் பள்ளிவாசலில் நேற்று (மார்ச்.27) மாலை ராமசுந்தரம், மற்றும் லிபாஸ் ஷேக், வாசுதேவன், ஆசிரியர் சுப்பிரமணி, யுவராஜ்,பெரோஸ் கான், சலீம் வழக்கறிஞர்கள் கென்னடி, பாஸ்கர், டேனியல் மற்றும் v துரைபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு நோன்பின் மாண்பு குறித்து பேசினார்கள். இதில் வருகை புரிந்த காங்கிரஸ் கட்சியினரை பள்ளிவாசலின் தலைவர் ஜிப்ரில் அவர்கள் வரவேற்றார் . நோன்பு திறக்கும் நிகழ்வில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.