பொன்னேரி நகராட்சி நகர்மன்ற கூட்டம்
நகராட்சி நகர் மன்ற கூட்டத்தில் நகராட்சியில் கழிப்பிட வசதி குடிநீர் வசதி இல்லை குப்பைகள் கையாளுவதில் வரி வசூலில் முறைகேடு நடப்பதாகவும் திமுக உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்;
பொன்னேரி நகராட்சி நகர் மன்ற கூட்டத்தில் நகராட்சியில் கழிப்பிட வசதி குடிநீர் வசதி இல்லை குப்பைகள் கையாளுவதில் வரி வசூலில் முறைகேடு நடப்பதாகவும் திமுக உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் இன்று நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் திமுக நகர்மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் தலைமையில் நகராட்சி ஆணையர் எஸ் கே புஷாரா முன்னிலையில் நடைபெற்றது பொன்னேரி நகராட்சியில் எதுவுமே சரியில்லை புதிதாக கட்டப்பட்ட நகர்மன்ற கட்டிடத்தில் கழிப்பிட வசதி குடிநீர் வசதி இல்லை நகர்மன்ற உறுப்பினர்களுக்கே இந்த நிலை உள்ளதாகவும் நகராட்சியில் குப்பைகள் முறையாக கையாளுவதில்லை அதில் முறைகேடுகள் நடப்பதாகவும் டெங்கு கொசு ஒழிக்கும் பணியாளர்களுக்கு முறைகேடாக வருகை பதிவு இல்லாத ஊழியர்களுக்கும் சேர்த்து ஊதியம் வழங்கப்படுவதாகவும் கொசு மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் இல்லை குப்பை அள்ளும் மின்கல வாகனங்கள் இல்லை அரசு அதிகாரிகள் நகராட்சிக்கு அரசுக்கும் பொதுமக்களிடம் கெட்ட பெயரை ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் கூறி திமுக உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் அதிமுக உறுப்பினர்களும் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி நகராட்சி நிர்வாகத்தை குற்றம் சாட்டினர் மேலும் நகராட்சி பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை மூட வேண்டும் என்றும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கூட்டத்தை நடத்த விட மாட்டோம் என திமுக உறுப்பினர்கள் கூட்டத்திலேயே தங்களது கருத்துக்களை தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தினர் மேலும் கருத்தடை செய்யப்படும் தெரு நாய்கள் கூட வீதிகளில் ஆங்காங்கே மீண்டும் குட்டி போடுகின்றன என்றும் நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் மத்திய அரசு உரிய திட்டம் தீட்டினால் மட்டுமே நாய்களை கட்டுப்படுத்த முடியும் என அமைச்சர் சட்டமன்றத்தில் தெரிவிப்பதாகவும் பொன்னேரியில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாகவும் நகர்மன்ற கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர் நகராட்சி நிர்வாகத்தி ஆணையர் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் செயல்பாடு சரி இல்லை எனக் கூறி அதிமுக நகர் மன்றத் துணைத் தலைவர் விஜயகுமார் கூட்டத்தில் கோபத்துடன் பேசி வெளியேறினார்