வாங்குவோர் மற்றும் விற்போர் சந்திப்புக்கூட்டம்..

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிப்பு பொருட்களின் மாவட்ட அளவிலான வாங்குவோர் மற்றும் விற்போர் சந்திப்புக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.;

Update: 2025-03-28 15:19 GMT
வாங்குவோர் மற்றும் விற்போர் சந்திப்புக்கூட்டம்..
  • whatsapp icon
திருவாரூர் மாவட்டம், விளமல் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிப்பு பொருட்களின் மாவட்ட அளவிலான வாங்குவோர் மற்றும் விற்போர் சந்திப்புக்கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிப்பு பொருட்களின் மாவட்ட அளவிலான வாங்குவோர் மற்றும் விற்போர்களுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள். இந்நிகழ்வில், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சௌம்யா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பொன்னம்பலம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News