திருச்சி டிவிஎஸ் டோல்கேட் இனி கலைஞர் டோல்கேட் என மாற்றம்..!

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்;

Update: 2025-03-28 18:53 GMT
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் இனி கலைஞர் டோல்கேட் என மாற்றம்..!
  • whatsapp icon
திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட டிவிஎஸ் டோல்கேட் பகுதியில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் பொய்யா மொழியால் கலைஞரின் திருவுருவச் சிலை நிறுவப்பட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த சிலை அமைந்துள்ள பகுதி டிவிஎஸ் டோல்கேட் என அழைக்கப்படுவதை மாற்றி, கலைஞர் டோல்கேட் என பெயர் மாற்றம் செய்திட மண்டல குழு தலைவர் மதிவாணன் கடந்த 2024 பிப்ரவரி 21ம் தேதி மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்தார். பின்னர் கடந்த ஜூலை 9ம் தேதி நகராட்சி நிர்வாக நிர்வாக இயக்குனர் மூலமாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலருக்கு பெயர் மாற்றம் தொடர்பான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசு முதன்மைச் செயலாளர், மார்ச் 4 தேதி அனுப்பிய கடிதத்தில், டிவிஎஸ் டோல்கேட் பெயர் மாற்றம் தொடர்பான தீர்மானத்தை மாநகராட்சி மன்றத்தில் முன்வைக்க அனுமதி வழங்கினார். எனவே டிவிஎஸ் டோல்கேட்டை , கலைஞர் டோல்கேட் என பெயரிட நேற்று மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Similar News