வேலி கருவேல முட்செடிகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் மண்டியுள்ள வேலி கருவேல முட்செடிகளை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்;

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையிலான விவசாயிகள் கையில் வேலி கருவ முட்செடிகளை கொண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள ஏரிகளிலும், குளங்களிலும் உள்ள வேலி கருவை முள் செடிகளை அகற்ற வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டும், இதுவரை 50 சதவிகிதம் கூட ஏரிகளிலும் குளங்களிலும் உள்ள வேலி கருவை முள் செடிகளை அகற்றவில்லை. எனவே, நீர்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் திருச்சி மாவட்டத்தில் உள்ள 178 ஏரிகளையும், குளங்களையும் ஆய்வு செய்து வேலி கருவை முட்களை அகற்றுவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு விட வேண்டும் என வலியுறுத்தி தர்ணா மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது