ராமநாதபுரம் நாய்கள் தொல்லைஅதிகரிப்பு நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் சுவாமி புனித நீராடுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த 65 வயது முதியவரை கடித்த தெருநாய்; மருத்துவமனையில் அனுமதிகிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் பகுதியை சேர்ந்த கருணாநிதி தனது குடும்பத்தாருடன் இன்று ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொள்வதற்காக வருகை தந்துள்ளார் முன்னதாக அக்னி தீர்த்த கடற்கரையில் குளித்துவிட்டு 22 புனித தீர்த்தமாடா கோவிலில் தீர்த்த கிணறு அமைக்கப்பட்டுள்ள வரிசையில் நின்று கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக நாய் ஒன்று அவரது காலில் கடித்து ரத்தம் கசிந்துள்ளது அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார் தற்போது மருத்துவமனையில் அவர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக வந்து அவரை தெருநாய் ஒன்று கடித்துள்ளதாகவும் கோவிலில் வரிசையில் என்னைப் போன்று ஏராளமான பெண்கள் குழந்தைகள் நின்று தீர்த்தம் குளித்து வருகின்றனர் உடனடியாக திருக்கோவில் நிர்வாகம் கோவிலை சுற்றியுள்ள தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்