ராமநாதபுரம் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திமுக ஒரு ஆலமரம் யார் புது கட்சி தொடங்கினாலும் திமுகவை தாண்டி தான் செல்ல வேண்டும், திமுகவை வீழ்த்த யாராலும் முடியாது திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பேட்டி.;

Update: 2025-03-29 06:32 GMT
  • whatsapp icon
ராமநாதபுரம் மாவட்டம் திமுக ஒரு ஆலமரம் யார் புது கட்சி தொடங்கினாலும் திமுகவை தாண்டி தான் செல்ல வேண்டும், திமுகவை வீழ்த்த யாராலும் முடியாது திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பேட்டி மகாத்மா காந்தி 100 நாள் திட்டத்தின் கீழ் பணி செய்த பணியாளர்களுக்கு கடந்த நான்கரை மாதங்களாக ரூ.4 034 கோடி மத்திய அரசு ஊதியம் வழங்காமல் இருப்பதை கண்டித்து தமிழக முழுவதும் இன்று 1134 இடங்களில் 100 நாள் பணியில் ஈடுபடும் ஊழியர்களை கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இன்று ராமநாதபுரம் மாவட்டம் உச்சப்புளியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆர்.எஸ் பாரதி கண்டன உரையாற்றி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் உச்சிப்புளி, கடுக்காய்வலசை, வாலாந்தரவை, மண்டபம், இரட்டையூரணி, நாகாச்சி, நாரையூரணி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 100 நாள் பணியாளர்கள் கலந்து கொண்டனர். பின்ன செய்தியாளிடம் பேசியவர் தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி 100 நாள் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை வழங்கிவிட்டு வரவேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய அவர் திமுக ஒரு ஆலமரம் என்பதால் அதனை வீழ்த்த யாராலும் முடியாது, புதிதாக கட்சி தொடங்கும் அனைவரும் திமுகவை தாண்டி தான் அரசியல் செய்ய முடியும். திமுக பலமாக இருப்பதால் ஒன்றும் செய்ய முடியாது என என தெரிவித்தார்.

Similar News