மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் மண்ணச்சநல்லூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை திட்ட நிதியை தமிழ்நாட்டுக்கு தராமல் வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் மண்ணச்சநல்லூரில் கண்டன ஆர்ப்பாட்டம்…!;

Update: 2025-03-29 09:24 GMT
  • whatsapp icon
100 நாள் வேலை உறுதித் திட்ட நிதி ரூ.4000 கோடியை தமிழ்நாட்டிற்குத் தராமல் ஏழை எளியோர் வயிற்றில் அடிக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்து திருச்சி வடக்கு மாவட்டம், கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் மண்ணச்சநல்லூரில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் கே.பி.ஏ.செந்தில்குமார் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண் நேரு கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மோடி அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கதிரவன், அவைத்தலைவர் அம்பிகாபதி, நகர செயலாளர் சிபிடி ராஜசேகர், வி.எஸ்.இ.இளங்கோவன், பொறியாளர் அணி அமைப்பாளர் இன்ஜினியர் ரமேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Similar News