அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றால் கட்சியிலிருந்து நீக்க்கப்படுவார்கள்:மு. அமைச்சர்
பூத் கமிட்டி நிர்வாகிகள் ஒரு முறை கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றால் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவார்கள் அடுத்த முறை பங்கேற்கவில்லை என்றால் கட்சியிலிருந்தே நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்;
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஒன்றிய கழக செயலாளர்கள் போன்று கிளை செயலாளர்களுக்கும் எடப்பாடி பழனிச்சாமி பணம் வழங்க உள்ளார் என்கிற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்வதாகவும் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஒரு முறை கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றால் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவார்கள் அடுத்த முறை பங்கேற்கவில்லை என்றால் கட்சியிலிருந்தே நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செய்தி தொடர்பாளர் பொன்னையன் எச்சரிக்கை விடுத்தார் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட சோழவரம் ஒன்றியம் சின்னம்பேடு, ஊராட்சியில் பூத் கமிட்டி கள ஆய்வு பணி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான விண்ணப்பங்களை வழங்கும் பணி திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி. பலராமன் தலைமையில் கழக செய்தி தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன் மற்றும் சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வினோத்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது கட்சி. நிர்வாகிகளிடையே கழக செய்தி தொடர்பாளரும் முன்னாள் அமைச்சர்ருமான சி. பொண்ணையன் பேசியதாவது கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அனுப்பிய கடிதம் கிடைத்ததா அனைத்து பூத் கமிட்டி. நிர்வாகிகளிடம் கேள்வி கேட்ட பொன்னையன் அவர்கள் கிடைக்கவில்லை என்றவுடன் கடிதம் கிடைக்கும் அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியபடி அவரின் கட்டளையை நீங்கள் கடைபிடித்து எடப்பாடி அவர்களை முதல்வராக்க பாடுபட வேண்டும் என்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஒரு முறை கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றால் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவார்கள் அடுத்த முறை பங்கேற்கவில்லை என்றால் கட்சியிலிருந்தே நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார் எடப்பாடியார் கட்டளையை மீறாமல் கடைபிடித்தாலே வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வீழ்த்த எவரும் இல்லை அதிமுகவிற்கு எதிரிகளே இல்லை என்ற நிலை உருவாகும் அதனை கட்சியினர் கடைபிடித்து களப்பணி ஆற்ற வேண்டும் என அவர் அறிவுறுத்திய அவர் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஒன்றிய கழக செயலாளர்கள் போன்று கிளை செயலாளர்களுக்கும் எடப்பாடி பழனிச்சாமி பணம் வழங்க உள்ளார் என்கிற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்தார்