பங்குனி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்
திருவள்ளூர் அருள் மிகு வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்: ஏராளமான பக்தர்கள் வழிபாடு;
திருவள்ளூர் அருள் மிகு வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்: ஏராளமான பக்தர்கள் வழிபாடு. திருவள்ளூர் அருள்மிகு வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். திருவள்ளூரில், பிரசித்திப்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் அமாவாசை தினமான இன்று பக்தர்கள் வந்திருந்து அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்பதாலும், முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பதாலும் திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் ஆந்திர, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வைத்திய வீரராகவர் கோயில் அருகில் உள்ள இருதய நாசினி திருக்குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.நோய்கள் தீர்க்கவும், தடைபட்ட திருமணம் நடக்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் வீரராகவப் பெருமாளை ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். அதே நேரத்தில் உறவினர்கள் இறந்திருந்தால், இந்த கோயிலில் இரவு தங்கினால் புண்ணியம் கிடைக்கும் என்பதாலும் ஏராளமான பக்தர்கள் இரவு நேரங்களில் கோயில் அருகே தங்கியும், ஸ்ரீ வைத்திய வீரராகவரை தரிசித்துவிட்டு செல்கின்றனர்.