உலக தண்ணீர் தினம் கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
திருத்தணியில் உலக தண்ணீர் தினம் கிராம சபை கூட்டம், மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் நடைபெற்றது,;
திருத்தணியில் உலக தண்ணீர் தினம் கிராம சபை கூட்டம், மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் நடைபெற்றது, கிராமத்தில் குடிதண்ணீர் இல்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு, நிகழ்ச்சி நடைபெறும் போது செல்போன் பேசிய அதிகாரிகள் , நிகழ்ச்சியில் சுகாதாரம் இல்லாத குடிதண்ணீரை மக்களுக்கு விநியோகம் செய்த அதிகாரிகள், கண் துடைப்புக்கு மருத்துவ முகாம் நடத்தி நிகழ்ச்சியை நாடகமாக மாற்றிய மாவட்ட ஆட்சியர் கண்டுகொள்ளவில்லை என்று குற்றச்சாட்டு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்ரஞ்ஜெயபுரம் ஊராட்சியில் சீனிவாசபுரம் கிராமத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு இந்த ஊராட்சி சேர்ந்த முஸ்லிம் மக்கள் மற்றும் பல்வேறு சமூக மக்களும் கலந்து கொண்டனர் கூட்டத்தில் அதிகாரிகளும் மற்றும் பொதுமக்களும் அமர்வதற்கு போதிய இடவசதிகள் செய்யவில்லை இந்த கூட்டத்தில் உலக தண்ணீர் தினம் என்று இதற்கான கிராம சபை என்று தெரிவித்து விட்டு கிராமசபை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முஸ்லிம் பெண் ஒருவர் எங்கள் கிராமத்தில் குடிதண்ணீர் வருவதே இல்லை என்று குற்றச்சாட்டை மாவட்ட ஆட்சியர் முன்பு முன் வைத்தார் மேலும் 12 ஆம் வகுப்பு வரை மேல்நிலைப்பள்ளி எங்கள் கிராமப் பகுதிக்கு வேண்டும் தற்போது எட்டாம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார். உலக தண்ணீர் தினத்தில் ஆட்சியர் முன்னிலையில் குடிதண்ணீர் இல்லை என்று குற்றச்சாட்டை முன்வைத்த மக்கள் மேலும் இந்த கூட்டம் நடைபெறும் கொண்டிருக்கும் போது மாவட்ட ஆட்சியர் அருகில் அமர்ந்திருந்த வட்டார வளர்ச்சித்துறை அதிகாரி சந்தானம் முக்கிய பொறுப்பில் உள்ள இவர் பொறுப்பற்ற முறையில் செல்போன் பேசியபடி அலட்சியமாக கூட்டத்தில் செயல்பட்டார் மேலும் ஒவ்வொரு கிராமத்திலும் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடிதண்ணீர் வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடத்தில் ஆலோசனை மேற்கொண்டதாக தெரிவித்த மாவட்ட ஆட்சியர் அவர் கூட்டத்தில் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த மக்களுக்கு போதிய அமர்வதற்கான இட வசதிகள் இல்லை, கூட்டத்தின் தீர்மானம் எதுவும் எழுதாத நோட்புக்கில் பொதுமக்களிடம் ஊர் மக்களிடம் கைநாட்டு மற்றும் கையெழுத்து வாங்கிய அதிகாரிகள் மக்களுக்குத் தெரியாமல் இவர்களுக்கு வேண்டப்பட்டது தேவைப்பட்டதை தீர்மானத்தில் நிறைவேற்றிக் கொள்ள இப்படி ஒரு திட்டமா என்று கேள்வி எழுப்பிய பொதுமக்கள் டூப்ளிகேட் குடிதண்ணீர் தண்ணீர் பாட்டில் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது சர்ச்சையை எழுந்துள்ளது மேலும் நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர் கையில் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் குப்பைகளை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலிருந்து அப்புறப்படுத்திக் கொண்டு இருந்தார் இதனையும் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை இப்படி தூய்மை பணியாளர்களுக்கு இப்படி ஒரு இந்நிகழ்ச்சியில் இப்படி ஒரு நிலையா என்று கேள்வி எழுப்பிய மக்கள் மேலும் நிகழ்ச்சியில் மக்களை அதிகம் திரட்டுவதற்காக பொதுமக்கள் வருகை வேண்டி இலவச மருத்துவ முகாம் மருத்துவ ஆலோசனை போன்ற முகாம்கள் அதிகாரிகள் நடத்தினார்கள் ஆனால் இந்த நிகழ்வில் பொதுமக்கள் போதிய அளவு பங்கு பெறவில்லை சுகாதாரத்துறையின் முகம் நடத்தையும் மக்களை கிராம சபை கூட்டத்திற்கு வராததால் கண்தொடைப்புக்கு மக்களை ஏமாற்றும் கூட்டமாக கிராம சபை கூட்டமாக அதிகாரிகள் நடத்தி மாவட்ட ஆட்சியரை ஏமாற்றியுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு முன் வைத்தனர்..