திமுகவை வீழ்த்த வேண்டும் என்கிற த.வெ.க தலைவர் விஜயின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன் - சீமான்

திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி;

Update: 2025-03-30 12:37 GMT
திமுகவை வீழ்த்த வேண்டும் என்கிற த.வெ.க தலைவர் விஜயின் நிலைப்பாட்டை  வரவேற்கிறேன் - சீமான்
  • whatsapp icon
திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாம்‌தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தூத்துக்குடி துப்பாக்கி சூடு, கொடநாடு கொலை, பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்டவற்றில் உரிய விசாரணை நடத்தப்படவில்லை. இந்தப் பிரச்சினைகள் எல்லாவற்றிலும் பல்வேறு சந்தேகங்கள் உள்ளது. அரசுக்கு எது தேவையோ அதை எடுத்துக்கொண்டு மற்றவற்றை மூடி மறைத்துக் கொள்கிறது. தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு அப்படித்தான் உள்ளது. அமைச்சரின் சகோதரர் கொலையை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. டாஸ்மாக் ஊழல் பிரச்சனை முடிந்ததா என்பது யாருக்கும் தெரியவில்லை. அதில், உண்மையில் தவறு நடந்ததா? இல்லையா? என்பது தெரியவில்லை. அதிகாரத்தில் இருக்கும் கிளை அலுவலகங்களாக தான் தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. குற்றவாளிகள் கையில் அதிகாரம் இருப்பதால் தமிழ்நாட்டில் தினமும் குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறுகிறது. குற்றவாளிகளை சுட்டு பிடிப்பது அரசின் இயலாமையை தான் காட்டுகிறது. திமுகவை வீழ்த்த வேண்டும் என்கிற தம்பி விஜயின் நிலைப்பாட்டை நான் வரவேற்கிறேன். என் எதிரியை நான் தனியாக தான் சந்திப்பேன். யாருடனும் கூட்டு சேர்ந்து எதிரியை சந்திக்க மாட்டேன். நாங்கள் வீரர்கள் தனித்து தான் எதிர்ப்போம். கூட்டணி வைத்தால் தான் வெல்ல முடியும் என்பது மரபோ, சட்டமோ அல்ல. நாங்கள் எதிரியை தீர்மானித்துக் கொண்டுதான் களத்திற்கு வந்தோம். எங்களுக்கு எந்தவித குழப்பமும் இல்லை. நாங்கள் வாங்க போகும் வாக்கு மற்ற கட்சிகளின் வாக்குகள் அல்ல மக்களின் வாக்குகளை. அனைத்து கட்சிகளுக்கும் ஒவ்வொரு தேர்தலுக்கும் புதிய சின்னங்கள் வழங்க வேண்டும் என்பதுதான் எங்களின் கொள்கை என்றார். பேட்டியின்போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Similar News