
கன்னியாகுமரி தொகுதி எம்பி விஜய் வசந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு :- ஒரு மாதம் நோன்பிருந்து, பசியின் துன்பத்தை அறிந்து இன்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் அனைவரிடத்திலும் அன்பை காட்டி, ஏழை எளியோருக்கு உதவிகள் புரிந்து அனைவரும் சகோதரத்துவத்துடன் சமூகத்தில் வாழ்ந்திட இந்நாளில் பிரார்த்திக்கிறேன். நபிகள் நாயகம் கற்பித்த ஈகையும் இரக்கமும் தழைத்தோங்க வேண்டுகிறேன். இத்தகைய பண்டிகைகள் மக்கள் மத்தியில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் உறுதிபட காரணமாக அமையட்டும். ஒரு வீட்டு பிள்ளைகளாக வாழ்ந்து வரும் நம்மை பிரிக்க சதி செய்பவர்களை கண்டறிவோம். நமது சமூகத்தில் நிலவி வரும் ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சிகளை நாம் ஒன்றிணைந்து முறியடிப்போம். உங்கள் உரிமைகளை காக்கவும், நலனை போற்றவும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நானும், காங்கிரஸ் கட்சியும் என்றும் குரல் கொடுப்போம் என இந்நாளில் உறுதி அளிக்கிறேன். உங்கள் அனைவரது இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும். உங்கள் மனங்களில் அமைதி பெருகட்டும். இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள். என கூறியுள்ளார்.