
அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் கோவிலில் கடந்த மாதம் 10-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இவ்விழாவின் தொடர்ச்சியாக மண்டலாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற திருக்கல்யாண விழாவில் அகஸ்தீஸ்வரம் ஊரை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் தாம்பூல தட்டில் பட்டு, வளையல்,பழவகைகள், மஞ்சள், குங்குமம்,பூ,இனிப்புகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை முத்தாம்மனுக்கு திருக்கல்யாண சீர்வரிசையாக எடுத்து வந்தனர். கோவிலில் இருந்து மேளதாளத்துடன் புறப்பட்ட ஊர்வலம் ஊரின் நான்கு சாலைகளையும் சுற்றி வந்து கோவிலில் நிறைவுற்றது.பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.விழா ஏற்படுகளை ஊர் அறங்காவலர் குழுவினர் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.