காய்ந்த புற்களில் தீ எறையூரில் புகை மூட்டம்
காட்டுத்தீ போல மளமளவென அருகில் உள்ள பகுதிகளுக்கு பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால், அப்பகுதி முழுதும் புகைமண்டலமாக மாறியது;

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில், எறையூர் கிராமம் உள்ளது. ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், வல்லம் அருகே பிரிந்து செல்லும் எறையூர் செல்லும் சாலையோரம் பல ஏக்கர் விவசாய நிலம் உள்ளன. தற்போது, கோடை பருவத்தில் தண்ணீர் பற்றாக்குறையால், விவசாயம் நடைபெறவில்லை. இந்த நிலையில், விளைநிலங்களில் உள்ள காய்ந்த புற்களில் நேற்று மதியம் 1:00 மணியளவில் தீப்பற்றி எரிய துவங்கியது. இதையடுத்து, காட்டுத்தீ போல மளமளவென அருகில் உள்ள பகுதிகளுக்கு பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால், அப்பகுதி முழுதும் புகைமண்டலமாக மாறியது. சிறிது நேரத்திற்கு பின், தீ தானாகவே கட்டுக்குள் வந்து அணைந்தது.