
தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரத்தில் 1744-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் மார்த்தாண்டவர்மா காலத்தில் கட்டப்பட்ட ராமசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலையில் சாமிக்கு சிறப்பு பூஜைகள், தொடர்ந்து கோவில் மேல்சாந்தி மனோஜ் வெங்கிடேஸ்வர ஐயர் முன்னிலையில் இடைக்கோடு புதுப்பள்ளி மடம் தந்திரி ஸ்ரீதரருநாராயணரு பூஜைகளை நடத்தினார். தொடர்ந்து கோவில் கொடிமரத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கோயில் ஸ்ரீகாரியம் மோகனகுமார், பத்மநாபபுரம் திமுக நகர பொருளாளர் ஸ்ரீராம், திருவிழாக்குழு நிர்வாகிகள் ஆதர்ஷ், சதீஷ், திவாகரன் நாயர், கோகுல் உட்பட பலர் பங்கேற்றனர்.