தென்குமரி கல்விக் கழக  நிர்வாகிகள் பதவியேற்பு 

கன்னியாகுமரி;

Update: 2025-03-31 04:26 GMT
தென்குமரி கல்விக் கழக  நிர்வாகிகள் பதவியேற்பு 
  • whatsapp icon
கன்னியாகுமரி அருகே  பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி மற்றும் ஸ்ரீ வைகுண்டர் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய 2 கல்லூரிகளையும் நிர்வகிக்கும் தென்குமரி கல்விக் கழகத்தின் 41-வது ஆண்டு மாணிக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா நேற்று பிள்ளையார்புரம்  சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் கலையரங்கத்தில் நடைபெற்றது.       விழாவுக்கு தென்குமரி கல்விக்கழக தலைவர் வக்கீல் ஆர். ஜெயசீலன் தலைமை தாங்கினார். வெள்ளிமலை விவேகானந்த ஆசிரமத்தின் ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்த ஜி ஆசியுரை வழங்கினார். தென்குமரி கல்விக் கழகத்தின் புதிய நிர்வாகிகளான தலைவர் வக்கீல் ஆர். ஜெயசீலன், துணைத் தலைவர் பேராசிரியர் சி. ஐயாத்துரை, செயலாளர் வக்கீல் பி. டி. செல்வகுமார், பொருளாளர் சி. நாராயணராஜா என்ற ஸ்ரீதர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.அழகேசன், டி. ஐயப்பன், கே. கனகநாதன், சி. சுதாமதி, எஸ். செல்வமணி என்ற எஸ். எஸ். மணி, கே. ஆர். தங்கமுருகேசன், எஸ். தர்மலிங்கம் என்ற உடையார், ஆர். தனபால், எஸ். பாரத்சிங்,ஏ. ரெத்தினபாண்டியன், எம். வெற்றிவேலன் ஆகியோர்கள் பதவியேற்று கொண்டனர்.       நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ஆர். மகேஷ், முன்னாள் எம்பி. எம். சி. பாலன், முன்னாள் எம்.எல்.ஏ. ஏ. நாஞ்சில்முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.    தென்குமரி கல்விக் கழக செயலாளர் வக்கீல் பி.டி. செல்வகுமார் 2 கல்லூரிகளின் வளர்ச்சி மற்றும் செயல் திட்டங்கள் குறித்து பேசினார்.    நிகழ்ச்சியில்  தென்குமரி கல்விக் கழக நிர்வாகிகள், பங்குதாரர்கள்,ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News