தடுப்பணையில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

திருவட்டாறு;

Update: 2025-03-31 04:43 GMT
தடுப்பணையில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
  • whatsapp icon
குளச்சல் அருகே உள்ள சைமன் காலனியை சேர்ந்தவர் சார்லஸ் மகன் ஸ்டீவ் (18). இவர் தோவாளையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று ஸ்டீவ்  மற்றும் அவரது 5 நண்பர்கள் மோட்டார் சைக்கிள்களில் திற்பரப்பு அறிவிக்கு சுற்றுலா வந்தனர்.      அங்கு அருவியல் குளித்து விட்டு மாலையில் திருவட்டாறு அருகே உள்ள அருவி கரைக்கு சென்றனர். அங்கு பரளியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் குளிக்க இறங்கினர். குளித்துக் கொண்டிருந்த போது ஸ்டீவ் எதிர்பாராமல் தண்ணீரில் மூழ்கினார். நண்பர்களால்  அவரை மீட்க முடியவில்லை.      அதனால் அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்த தண்ணீர் இறங்கி அவரை தேடினர். பின்னர் சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னர் ஸ்டீவை பிணமாக மீட்டனர். இது குறித்து திருவட்டாறு போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News