பள்ளிக்கூட வளாகத்தில் புகுந்த யானை கூட்டம்

கோதையாறு;

Update: 2025-03-31 06:06 GMT
பள்ளிக்கூட வளாகத்தில் புகுந்த யானை கூட்டம்
  • whatsapp icon
குமரி மாவட்டம் கோதையாறு வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக ஏற்கனவே புகார் உள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் 9 காட்டு யானைகள் மயிலார் அரசு தொடக்கப்பள்ளி அருகே வந்துள்ளன. அவற்றில் நான்கு யானைகள் பள்ளியின் பக்கவாட்டு கேட்டை உடைத்துக் கொண்டு பள்ளி வளாகத்துக்குள் புகுந்தன.  மற்ற ஐந்து யானைகளும் வெளியே நின்றன. உள்ளே புகுந்த யானைகள் பள்ளி வளாகத்தில் நடவு செய்த செடிகளை சேதப்படுத்தியதோடு, அங்கிருந்து பிளாஸ்டிக் குப்பை தொட்டிகளை உடைத்து அட்டகாசம் செய்தன.       இதை கவனித்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் யானைகளை விரட்டும் நடிக்கையில் ஈடுபட்டனர். யானைகள் சென்ற பின்னர் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். அந்த பள்ளிக்கூடத்தில் சுற்று பகுதிகளை  சேர்ந்த 29 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.       நேற்று பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வராததால் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டது. மேலும் இரவு நேரத்தில் யானைகள் வரக்கூடாது என்பதற்காக இளைஞர்கள் பலர் பள்ளிக்கூட வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வனத்துறைக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Similar News