குமரி : எஸ்பி கடும் எச்சரிக்கை 

பைக் சாகசம்;

Update: 2025-03-31 07:11 GMT
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-      குமரி மாவட்டத்தில் விபத்துகளை தடுக்கும் வகையில் காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகிறது.      தற்போது கோடை விடுமுறை என்பதால் மாணவர்கள் பைக் சாகசங்களில் ஈடுபடலாம் என்ற தகவலால் முக்கிய சாலைகள் மற்றும் பாலங்களில் போலீசார் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது போன்ற  நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறார்கள் பைக் ஓட்டினால் அவர்களின் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.      போதை பொருட்கள்  விற்பனையை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தினமும் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை  நடக்கிறது. மாணவ மாணவிகள் கோடை விடுமுறை காலத்தை எதிர்காலத்துக்கு பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும். போதை ஒழிப்பு மற்றும் போதையில் ஏற்படும் தீமைகள் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். என்று கூறினார்.

Similar News