போதை மாத்திரைகள் பறிமுதல்
திருச்சி பாலக்கரை அருகே போலீசார் நடத்திய சோதனையில் 140 போதை மாத்திரைகள் பறிமுதல்;

திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டையில் உள்ள பொது சுகாதார வளா கம் அருகே போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக பாலக்கரை போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து சோதனை செய்தனர். இதில் அவர் விற்பனைக்காக போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரித்ததில், அவர் அதே பகு தியை சேர்ந்த ரவுடி சந்துரு என்கிற சந்திரசேகர் (வயது 33) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து சந்துருவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து 140 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.