உத்திரமேரூரில் திமுக சார்பில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா
உத்திரமேரூர் தொகுதியில் திமுக சார்பில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா;
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் ஆனம்பாக்கம் கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சாலவாக்கம் ஒன்றிய இளைஞர் மற்றும் விளையாட்டு அணி திமுக சார்பில், சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் டி.குமார் தலைமையில், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் வெங்கட்ராமன் முன்னிலையில் கிரிக்கெட் விளையாட்டு போட்டியை கடந்த 9ஆம் தேதி உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் தொடக்கி வைத்தார். இந்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் ரொக்கம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை வந்த உத்திரமேரூர் எம்எல்ஏ க. சுந்தர் அந்த கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து பின்னர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூபாய் 50 ஆயிரம், இரண்டாம் பரிசு 25 ஆயிரம், மூன்றாம் பரிசு 10 ஆயிரம், நான்காம் பரிசு 5 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கோப்பைகள் பதக்கங்கள் உள்ளிட்டவை வழங்கினார்கள். அதைத்தொடர்ந்து, அங்குள்ள பொதுமக்கள், இளைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்டவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.