குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத் (TMJ) சார்பில், மக்கள் வசதிக்காக பல்வேறு இடங்களில் ஈத்-உல்-பித்ர் தொழுகைகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. தக்பீர் இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கி, தொழுகை 7:30 மணிக்கு நடைபெற்றது. தொழுகைகள் UAE சமூக நல கூடதிலும் , ஜும்மா மஸ்ஜித், மற்றும் ஆற்றுபள்ளி ஈத் கா ( திடல் ) மைதானம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஈத் தொழுகை நிறைவேற்றினார்கள். ஜமாஅத் குழு உறுப்பினர்கள் சிறப்பான ஏற்பாடுகளை மேற்கொண்டனர். ரமதான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து, இறைவனை தொழுதும், நீண்ட நேர இரவு தொழுகைகள் நடத்தும் ஏற்பாடுகளை செய்து, சமூகப்பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் TMJ நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன. மக்கள் ஒன்றாக வாழ்த்துக்களை பகிர்ந்து, சந்தோஷமாக ஈத் நிகழ்வுகளை நிறைவு செய்தனர்.