கல்லூரி மாணவர்களை தாக்கிய ரௌடி கைது

கன்னியாகுமரி;

Update: 2025-03-31 11:21 GMT
தென்தாமரை குளம் பகுதியை  சேர்ந்தவர் கண்ணன் மனைவி கண்மணி (42).  இவர்களது உறவினர் சுப்பிரமணி. இவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்தது.சம்பவ தினம் சுப்பிரமணியன் மகன் கார்த்திக் செல்வன் (29) என்பவர் கண்மணி வீட்டிற்குள் புகுந்து அவரிடம் தகராறு செய்து, அருவருப்பான முறையில் நடந்து கொண்டார். கண்மணி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதை கண்ட கண்மணி மகன்கள் கல்லூரியில் படிக்கும்  அஸ்வின் (19) யோகேஷ் (18) ஆகியோர் வந்து கண்டித்தனர். அப்போது அவர்களை கார்த்தி செல்வம் கம்பியால் தாக்கியுள்ளார். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் கண்டிக்கவே கொலை மிரட்டல் விடுத்து கார்த்திக்க செல்வம் தப்பினார்.       படுகாயம் அடைந்த அஸ்வின், யோகேஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் தென்தாமரை குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக் செல்வத்தை கைது செய்தனர். கார்த்தி செல்வம் போலீஸ் சரித்திர குற்றவாளிகள் பதிவேடு பட்டியில் உள்ளார்.

Similar News