பொறியியல் பணிகள்: ஈரோடு, பாலக்காடு ரயில்கள் பகுதி ரத்து
பொறியியல் பணிகள் காரணமாக ஈரோடு, பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.;

திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோட்டில் பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால், திருச்சி - ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) வரும் ஏப். 3, 5, 8, 11 ஆம் தேதிகளில் கரூா் - ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - கரூா் இடையே மட்டும் இயங்கும். திருச்சி - பாலக்காடு விரைவு ரயிலானது (16843) வரும் ஏப். 4, 6, 12, 14, 18 ஆகிய தேதிகளில் சூலூா் - பாலக்காடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பராமரிப்புப் பணிகள் முடிந்ததும் இந்த ரயிலானது சூலூா் - பாலக்காடு இடையே முன்பதிவற்ற சிறப்பு ரயிலாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.